ஆப்நகரம்

புரட்டாசி முடிந்ததால் மீன் வாங்க மெரினாவில் அலைமோதும் கூட்டம்; அதுக்குனு இவ்வளவு விலையா!

சென்னை: மீன் வாங்க மெரினா சந்தையில் ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Samayam Tamil 21 Oct 2018, 1:27 pm
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ‘பெருமாள் மாதம்’ என்று பேச்சு வழக்கில் கூறுவர். இந்த மாதம் விஷ்ணுவிற்குரிய வழிபாடு, விரதம் மேற்கொள்வர். எனவே மாமிசம் சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்த்து வருவர்.
Samayam Tamil Fish Market


கடந்த 17ஆம் தேதி உடன், புரட்டாசி மாதம் நிறைவடைந்த நிலையில், ஐப்பசி மாதம் நடந்து வருகிறது. அதனால் மாமிசம் உண்ணும் ஆசையை கட்டுப்படுத்தி வைத்திருப்பவர்கள், ஆர்வத்துடன் தங்கள் ஆசையை நிறைவேற்றித் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை மெரினா மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதேசமயம் மீன்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.

அதன்படி, வஞ்சிரம் மீன் போன வாரம் கிலோ ரூ.600 என்றிருந்தது. ஆனால் இன்று ரூ.1200ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிறிய இறால் ரூ.400, வவ்வால் ரூ.650, கொடுவா ரூ.500 என விற்கப்பட்டு வருகிறது.

மாமிச சந்தையைப் பொறுத்தவரையில் மட்டன், சிக்கனை விட மீன்களையே மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

After Purattasi month people crowd occupies Marina fish market.

அடுத்த செய்தி