ஆப்நகரம்

கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய அதிமுக தொண்டர்கள்!

அதிமுக தொண்டர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது.

Samayam Tamil 27 Jan 2021, 11:43 pm

ஹைலைட்ஸ்:


  • தமிழகத்தின் மறைந்த முதல்வர்களான அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சமாதிகள் கட்டப்பட்டுள்ளன

  • ஜெயலலிதாவுக்கு பிறகு எந்த தலைவருக்கும் மெரினாவில் சமாதி கட்டக்கூடாது என்று ட்ராஃபிக் ராமசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கருணாநிதி நினைவிடம் -சென்னை மெரினா கடற்கரை
சென்னை மெரினா கடற்கரை
தமிழக அரசின் சார்பில மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இகனை முதல்வர் இபிஎஸ், துணை ஓபிஎஸ் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மெரினாவில் குவிந்தனர். அவர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முண்டியடித்து கொண்டு பார்த்து அவரை நினைவுகூர்ந்தனர்.

ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற அதிமுக தொண்டர்களில் சிலர் அப்படியே அண்ணா சமாதிக்கு அருகே உள்ள திமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மெரினாவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்... காணும் பொங்கலுக்கு வரும்னு சொன்ன கொரோனா இப்ப பரவாதா?

அதிமுக தொண்டர்கள் திமுகவின் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.

கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் இரு துருவங்களாக இருந்தபோதும், தனிப்பட்ட முறையில் அவர்கள் இடையே இணக்கமான நட்பு இருந்தே வந்தது. அரசியலில் இந்த இணக்கம் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இடையே இருந்ததில்லை என்று அரசியல் விமர்சகர்கள் சொல்வதுண்டு.

எப்படி இருக்கிறது ஜெயலலிதா நினைவிடம்? சில தகவல்கள்

அவர்களின் இந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் அதிமுக தொண்டர்கள் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தியுள்ளனர் என கூறலாம்.

அடுத்த செய்தி