ஆப்நகரம்

சென்னை - புதுச்சேரி இடையே பழமையான கார்கள் பேரணி!

புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் சென்னை ஹெரிடேஜ் மோட்டார் கிளப் இணைந்து பாரம்பரிய பழமையான கார் பேரணி நடத்துகிறது.

Samayam Tamil 2 Feb 2019, 8:01 pm
புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் சென்னை ஹெரிடேஜ் மோட்டார் கிளப் இணைந்து பாரம்பரிய பழமையான கார் பேரணி நடத்துகிறது.
Samayam Tamil Vintage Car rally


புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் சென்னை ஹெரிடேஜ் மோட்டார் கிளப் இணைந்து சென்னை முதல் புதுச்சேரி - புதுச்சேரி முதல் சென்னை வரை இன்று மற்றும் நாளை 10வது ஆண்டு பாரம்பரிய பழமையான கார் பேரணி நடத்துகிறது.

இதில் பழமையான மற்றும் புராதனமான 70 க்கும் மேற்பட்ட கார்களும் பங்கேற்கிறது. இதில் ஆஸ்ட்டின் (1927ம் ஆண்டு மாடல்), மோரிஸ் (1935), சிட்ரான் (1946), டாட்ஜ் (1933), சிங்கர் (1947), மற்றும் பீட்லி (1966), போர்டு மஸ்டாங் (1967), மோரிஸ் மினார்ம் 1000 சி.சி., ஜாகுவார் (1936) மற்றும் 30 இரு சக்கர வாகனங்கள் பங்கேற்கிறது.
இந்த பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பீச் சாலையில் இன்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பீச் ரோட்டில் இருந்து நாளை காலை 8 மணியளவில் சென்னைக்கு அந்த கார்கள் பேரணியாக கிளம்பும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்