ஆப்நகரம்

மினி கிளினிக்குகளில் மருத்துவர் நியமனம் தற்காலிகமா?

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Samayam Tamil 10 Feb 2021, 8:02 am
தமிழக அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சமத்துவ டாக்டர்கள் சங்க பொது செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Samayam Tamil டாக்டர்கள் போராட்டம்


அவர் தெரிவித்ததாவது:

தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வும் காலமுறை பதவி உயர்வும் வழங்கிட வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்புகளில் இட ஒதுகீட்டை மீண்டும் வழங்கிட வேண்டும்.

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் UG & PG மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கிட மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றார்.

கிருபானந்த வாரியார் பிறந்த நாள் இனி அரசு விழா... முதல்வர் அறிவிப்பு!

மேலும் எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பும் நிறைவு பெற்று, பணி நியமனத்திற்காக காத்திருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பணி நியமன ஆணையை உடனடியாக வழங்கிட வேண்டும்.

மினி கிளினிக்குகள் அனைத்திற்கும் நிரந்தர அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தற்காலிக பணி நியமனம் கூடாது என்றார்.

ஆண்டுதோறும் எம்.ஆர்.பி தேர்வை நடத்தி, காலிப் பணி இடங்களை அவ்வப்பொழுது நிரப்பிட வேண்டும் எனவும் ஆண்டிற்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்துவது வரவேற்புக் குரியது.அதே சமயம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கிட வேண்டும் என்றார்.

அடுத்த செய்தி