ஆப்நகரம்

காலையிலேயே இருட்டிக்கிட்டு இருக்கு வானம்...சென்னையில இன்னைக்கு டிராஃபிக் ஜாம்தான்!

சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே மழை பெய்து வருவதால் மாநகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் இன்று வாரநாள் என்பதால் மழை காரணமாக முக்கிய சாலைகளில் டிராஃபிக் ஜாம் ஏற்படுமே இன்று பணிக்கு செல்வோர் அச்சமடைந்துள்ளனர்.

Samayam Tamil 12 Nov 2020, 9:53 am
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்று (நவம்பர் 11) கணித்திருந்தது.
Samayam Tamil சென்னை மழை நிலவரம்
சென்னை - இன்றைய வானிலைை நிலவரம்


அந்த கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கே.கே.நகர், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

நகரின் பல இடங்களில் வானம் கருமேககூட்டத்துடன் காணப்படுவதால் இன்று நாள் முழுவதும் தொடர்மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மாநகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிட்டியில இன்னைக்கு நைட்ல இருந்து சூடுபிடிக்கும் தீபாவளி மழை?!

அதேசமயம் இன்று வாரநாள் என்பதால், மழை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமே என்ற அச்சம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் தீபாவளிக்கு இன்னும் ஓரிரு நாட்களிலே உள்ள நிலையில் மழை காரணமாக தங்களது வியாபாரம் பாதிக்கப்படுமோ என்று வணிகர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி