ஆப்நகரம்

தரமற்ற உணவுகள் குறித்து வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்

தரமற்ற உணவுகள் குறித்து வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 15 May 2017, 6:18 am
சென்னை : தரமற்ற உணவுகள் குறித்து வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார்.
Samayam Tamil bad qualitty food complined whatapp no
தரமற்ற உணவுகள் குறித்து வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்


இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தரமில்லாத குடிநீர் கேன்கள், குளிர்பானங்கள், தரமற்ற தயிர், மோர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் குறித்து வாட்ஸ்ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

கார்பைடு கல்வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் உள்ளிட்டவை தொடர்பாக புகார்களையும் தெரிவிக்கலாம். 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், 044 - 23813095 என்ற அலுவலக எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். commrfssa@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்." என்று அவர் கூறியுள்ளார்.

bad qualitty food : complined whatapp no

அடுத்த செய்தி