ஆப்நகரம்

மெரினா கடற்கரையில் தடை மேலும் நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி!

பொதுமுடக்க அறிவிப்பை ஒட்டி மெரினா கடற்கரையில் தடை நீட்டிப்பு குறித்து சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 5 Oct 2020, 1:38 pm
தமிழகத்தில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. அதன்பிறகு மத்திய அரசு உத்தரவுப்படி படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது. ஒருவேளை அனுமதி வழங்கப்பட்டால் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இது வைரஸ் பரவலுக்கு வழிவகுத்து விடும் என்று அஞ்சப்படுகிறது.
Samayam Tamil Chennai Marina


இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

இதற்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி பதிலளிக்கையில் தமிழகத்தில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை: தளர்வுகள் வேண்டும்!

இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மெரினா கடற்கரையில் வரும் 31ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

முகக்கவசம் அணியாவிட்டாலும், போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டாலும் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில் தடையை மீறி கடந்த சில நாட்களில் மெரினாவிற்கு வந்த பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து, உரிய அறிவுரைகள் வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி