ஆப்நகரம்

சென்னை உணவுத் திருவிழா: பீஃப் பிரியாணிக்கு இன்று முதல் அனுமதி!

சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Aug 2022, 10:44 am
சுக்குபாய் அரங்கில் இன்று முதல் பீஃப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil beef briyani


சென்னை தீவு திடலில் சிங்கார சென்னை உணவு திருவிழா 2022 நேற்று தொடங்கியது. 14ஆம் தேதி வரை இந்த உணவுத்திருவிழா நடைபெறுகிறது. அதன் துவக்க விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உணவு பாதுகாப்பு துறை இயக்குனர் செயலாளர் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூன்று நாட்கள் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள், சுவை மிக்க உணவுகள், உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத உணவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 150 அரங்குகள் மூலம் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி மிஸ்ஸிங்: அமைச்சர் அளித்த விளக்கம்!
உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை, சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உணவுகளை சுவைப்பதுடன் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எத்தகைய உணவு முறைகள் தாங்கள் உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு வசதியாக இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

150 அரங்குகளில் பீஃப் பிரியாணிக்கான அரங்கு இடம்பெறவில்லை. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நான் கூட பீஃப் பிரியாணி சாப்பிடுவேன், உணவு என்பது தனி மனித உரிமை. பீஃப் பிரியாணி அரங்கம் அமைக்க கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கி இருப்போம்” என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் பொருளாதார புரட்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
இருப்பினும் இது தொடர்பான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் குறைந்தபாடில்லை. இந்நிலையில் இன்று முதல் பீஃப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீஃப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளது.

அடுத்த செய்தி