ஆப்நகரம்

ரோகிணி: வீடியோ எடுத்த இளைஞரின் பரிதாப நிலை... ஷாக் தகவல்..!

சென்னை ரோகிணி தியேட்டரில் நரிக்குறவ குடும்பத்துக்காக குரல் கொடுத்த இளைஞர் யார் என்ற தெரியுமா?

Samayam Tamil 31 Mar 2023, 7:00 pm
ரோகிணி திரையரங்கில் 'பத்து தல' படத்தை பார்க்க வந்த நரி குறவர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க பேசுபொருளானது. சமூகத்தினர், நடிகர் நடிகைகளை, இயக்குனர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வரை ரோகிணி நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
Samayam Tamil rohini theatre issue


மேலும், கோயம்பேடு காவல் துறையினர் ரோகிணி தியேட்டர் ஊழியர் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

ஒரு காலை நேரத்தில் அனைவரும் தியேட்டருக்குள் நுழையும் அவசரத்தில் நடந்த சம்பவத்தையும் உற்று நோக்கி அதற்கு எதிராக குரல் எழுப்பிய அந்த வீடியோ எடுத்த இளைஞரால்தான் இந்த விவகாரம் தமிழகம் முழுக்க தெரிய காரணமாக இருந்தது.

மாநில அளவில் நரிக்குறவர் மீதான பார்வையை மாற்றுவதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அந்த இளைஞர் யார்? அவர் என்ன செய்கிறார் என்பது சமூக வலைத்தளம் வாயிலாக தெரிய வந்துள்ளது.

கம்யூனிஸ்ட் அமைப்பை சார்ந்த லெனின் என்பவர் இந்த விவரத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த விவரத்தை பார்க்கலாம்

அந்த இளைஞர் பெயர் விவேக் என்கிற விவேகானந்தன். இவர் இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்தவர். இதே அறச்சீற்றத்துடன், தான் பயின்ற (MCC) சென்னை கிறித்துவக் கல்லூரியில் போடப்பட்ட பழமைவாதம் நிறைந்த Code of conduct ஐ எதிர்த்து குரல் எழுப்பினர். நிர்வாகம் மிக மோசமான முறையில் இவரை கையாண்டது. நியாயத்திற்காக போராடியதற்கு தண்டனையாக இந்த செமஸ்டர் முழுவதும் விவேக்கை இடை நீக்கம் செய்யதுள்ளது MCC கல்லூரி. தற்போதுவரை அவர் இடை நீக்கத்தில்தான் உள்ளார்.

அறச்சீற்றம், இந்த சமூகத்தை நல்வழியில் இட்டுச்செல்ல மிக மிக அவசியம். அத்தகைய குணம் கொண்ட விவேக்கின் கல்வி பாதிக்கபடாமல் இருப்பது அவசியம். பொது சமூகம் விவேக்கின் கல்வியை பாதுகாக்க குரல் எழுப்ப வேண்டும் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

வீடியோவில் தனது முகத்தைக்கூட காட்டாமல் ஒரு சமூகத்துக்காக வரப்போகும் இன்னல்களை குறித்து எதையும் பொருட்படுத்தாமல் நரிக்குறவ பெண்ணின் குடும்பத்துக்காக குரல் அந்த வாலிபர் தான் படிக்கும் கல்லூரியின் சிஸ்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து சஸ்பெண்ட் ஆகியும் சமூகத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் செயல் புரட்சிகரமாக உள்ளது. அவருக்கு பாராட்டுகள்.

அடுத்த செய்தி