ஆப்நகரம்

பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு... கனிமொழி்க்கு காயத்ரி ரகுராம் 'நச்' கேள்வி!

தேர்தலில் மகளிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே திமுகவின் லட்சியம் என்று அக்கட்சியின் எம்பியான கனிமொழியின் கருத்தை பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 22 Sep 2021, 10:15 am

ஹைலைட்ஸ்:

  • சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு -கனிமொழி விருப்பம்.
  • திமுகவில் உங்களை முதல்வராக்க இடஒதுக்கீடு தருவார்களா என்று காய்தரி ரகுராம் எதிர்கேள்வி.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil காயத்ரி ரகுராம்
பாஜகவின் காயத்ரி ரகுராம் கனிமொழிக்கு நச் கேள்வி
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் தலைமையிலான தோழமை கட்சிகள் கருப்பு கொடியேந்தி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக எம்.பி.யும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தின் முன் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஊரக உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதே போன்று சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைபாடு" என்று கருத்து தெரிவித்திருந்தார்.


கனிமொழியின் இந்த கருத்தை நடிகையும், பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'திமுகவில் முதல்வராக இருக்க உங்களுக்கு இடஒதுக்கீடு தருவார்களா?' என்று கேள்வியெழுப்பி உள்ளார்.

அரசியல் பிரமுகர்களின் கருத்துகளை சுட்டிக்காட்டி, பிரபல நடிகையான கஸ்தூரி தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். சமீபகாலமாக அவர் சர்ச்சைகுரிய கருத்துகளை ட்விட்டரில் பதிவிடாத நிலையில், பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் திமுக பிரமுகர்களின் கருத்துகளை ட்விட்டரில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி