ஆப்நகரம்

கைக்கூலி அரசு; மீண்டும் வாயை கொடுத்த எச்.ராஜா!

தமிழக அரசு கைக்கூலியாக மாறி இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறி இருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும், பாஜகவினர் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Samayam Tamil 10 Jan 2022, 7:51 am
சென்னை மேற்கு மாம்பலத்தில் இந்து கோவில்களில் அறங்காவலர்கள் குழுத் தேர்வு மற்றும் இந்து கோவில்கள் மேம்படுத்துதல், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையின் உண்மையை அறிவிக்கக் கோரி இந்து கோவில்கள் மீட்பு இயக்கத்தின் சார்பில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
Samayam Tamil எச்.ராஜா
எச்.ராஜா



அப்போது எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவிலில் உள்ள தங்கத்தை டிரஸ்டி இல்லாமல் உருக்க முடியாது. அறங்காவலர் இல்லாமல் எந்த செயலும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. எந்த கோவிலும் பணத்துடன் இருந்து விடக் கூடாது என்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் ஆகியோர் அறங்காவலர் நியமனம் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கையில் உண்மை தன்மை இல்லை. இந்துகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

திமுக அரசுக்கு விசிக செக்; முதல்வர் மு.க.ஸ்டாலின் ஷாக்!

நீதிமன்ற தீர்ப்பின் படி, பாரம்பரிய கோவில்களில் அறங்காவலருக்கு தான் முன்னுரிமை. எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்க கூடாது. அரசியல் பின்னணியில் இருப்பவர்கள் அறங்காவலர்களாக இருக்க முடியாது என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக சேகரிக்கப்படும் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இந்து சமய அறநிலையத்துறையில் பக்திமானாக இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அதற்கு மாறாக கோவில்களில் இருக்கும் நிதியை சுரண்டும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது.

ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து; அதிரடியாக வந்தது கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள 6,414 கோவில்களில் 1,415கோவில்களை இந்து சமய அறநிலையத்துறையினர் அழித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜெயங்கொண்டத்தில் இருக்கும் கோவிலை இடித்தது உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் நிதியை சூறையாடும் நோக்கோடு தான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

கோவில்கள் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்களை ஒன்றிணைத்து தான் போராட வேண்டிய நிலை உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு; கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தல்!

நான் முதல்வர் ஸ்டாலினுக்கு விரோதமானவன் அல்ல. ஆனால் அவருடைய தலைமையில் செயல்பட்டு வரும் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அரசிற்கு எதிராக தான் குரல் கொடுத்து வருகிறேன்.

கிறிஸ்துவ மிஷினரிகள் கைக்கூலியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்து சமய அறநிலைய துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற கோவில்களை நிர்ணயிக்க, அரசிற்கு திறமையில்லை. இவ்வாறு பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

அடுத்த செய்தி