ஆப்நகரம்

ஊரில் பட்டாம்பூச்சியைப் பார்க்கவே முடியவில்லை, ஏன் தெரியுமா?

சென்னையில் ஆண்டுதோறும் இந்த காலத்தில் 3 விதமான பட்டாம்பூச்சி வகைகள் அதிகளவில் காணப்படும் என்றும், இப்போது எதையும் பார்க்க முடியவில்லை என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Samayam Tamil 7 Sep 2020, 6:04 pm
சென்னையில் கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் அதிகளவில் பட்டாம்பூச்சிகள் காணப்பட்டது. அதே இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது. மிகவும் அரிதாகவே ஊருக்குள் பட்டாம்பூச்சிகளைப் பார்க்க முடிகிறது. அதே வேளையில் ஆய்வாளர்கள் கூறுகையில், “பட்டாம்பூச்சி உற்பத்தி பாதிக்கும் வகையில் இயற்கை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை” என்கிறார்கள்.
Samayam Tamil butterfly numbers are down this year what is the reason
ஊரில் பட்டாம்பூச்சியைப் பார்க்கவே முடியவில்லை, ஏன் தெரியுமா?


பெரும்பாலும் இந்த காலகட்டத்தை இனப் பெருக்கத்திற்காகப் பட்டாம்பூச்சிகள் பயன்படுத்துமாம். கடந்த சில ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட இந்த பட்டாம்பூச்சிகள், இந்த ஆண்டு இடம் பெயர்ந்து நகர்ந்து சென்றுவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டுகளில் இந்த பட்டாம்பூச்சிகள் சென்னையில்தான் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டிருந்தது.

பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கை மட்டுமே சென்னையில் குறைந்து காணப்படுகிறது. பிற சிறிய உயிரினங்களான வெட்டுக்கிளி உள்ளிட்டவை வழக்கமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.

குறிப்பிட்ட பட்டாம்பூச்சிகள் வழக்கமாக மே மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை கூட்டம் கூட்டமாக இடமாறுதலில் ஈடுபடும். அப்படிதான் இவை சென்னைக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு சென்னையைவிட்டுத் தொலைவாக இந்த பட்டாம்பூச்சிகள் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தி தெரியாது போடா vs திமுக வேணாம் போடா... என்ன நடக்கிறது ட்விட்டரில்?

பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கை வீழ்ந்துள்ளது குறித்து சாத்தூரைச் சேர்ந்த பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளர் ராம்குமார் என்பவரைத் தொடர் கொண்டு கேட்டோம். அப்போது அவர், “பட்டாம்பூச்சிகள் இனப் பெருக்கம் செய்வது பிற உயிரினங்களைக் காட்டிலும் வேறுபட்ட ஒன்று. இதன் காரணமாகப் பட்டாம்பூச்சிகள் இடப் பெயர்வு காலத்தில் சமயங்களில் இப்படி அதன் எண்ணிக்கை வீழ்ச்சி அடையும். 6 வருடங்களுக்கு ஒருமுறை இதுபோல் ஒரு நிலை பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கையில் உருவாகிறது” என விளக்கம் அளித்தார்.

இந்த காரணங்கள் ஒருபுறமிருந்தாலும், இப்போதைய நேரத்தில் சென்னையில் வீடுகள் போன்ற கட்டுமான பணிகள் காரணமாக மரங்கள் வெட்டப்படுகின்றன. இயற்கை அழிக்கப்படுகின்றன. இதுவே பட்டாம்பூச்சி எண்ணிக்கை குறைவு எனப் பல அழிவிற்குக் காரணியாக உள்ளது என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி