ஆப்நகரம்

சென்னை உணவகங்களில் கன்றுக்குட்டி கறி விற்பனை... அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னையில் சில அசைவ உணவகங்களில் கோழிக்கறி, ஆட்டுக்கறி என்று கூறி கன்றுக்குட்டி கறியில் உணவு சமைத்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Samayam Tamil 9 Aug 2018, 9:53 pm
சென்னையில் சில அசைவ உணவகங்களில் கோழிக்கறி, ஆட்டுக்கறி என்று கூறி கன்றுக்குட்டி கறியில் உணவு சமைத்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
Samayam Tamil chennai-calf-cuury-cover-image
சென்னை உணவகங்களில் கன்றுக்குட்டி கறி விற்பனை... அதிகாரிகள் திடீர் ஆய்வு


பெரியமேடு பகுதியில் இயங்கும் உணவகங்கள் சில சிக்கன், மட்டன் என்று கூறி கன்றுக்குட்டி கறியில் உணவு சமைத்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன.

இதை அடுத்து அதிகாரிகள் சிலர் புகார் கூறப்பட்ட உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிக்கன், மட்டன் என கூறி விற்கப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உணவுப் பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் ஆப் புகார் எண்ணுக்கு கன்றுக்குட்டி கறி குறித்த வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்தது. இதையடுத்து, சென்னை பெரிய மேட்டில் நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அதிகாரி கதிரவன் உத்தரவின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, குளிரூட்டும் பெட்டியில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த கறிகளையும், அங்கிருந்த கால்களையும் ஆய்வு செய்ததில் அவை கன்றுக்குட்டிகளின் கறிதான் என உறுதிப்படுத்திய அதிகாரிகள், பாக்கெட்டுக்களில் அடைத்து ஹோட்டல்களுக்கு விற்கப்பட தயாராக வைத்திருந்ததையும் கண்டறிந்தனர். 300 கிலோ கறியையும், சுத்தமற்ற மசாலாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டப்படி மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் கீழ் அரசு ஒதுக்கிய இறைச்சிக் கூடங்களில் மட்டுமே ஆடு, மாடுகளை வெட்ட வேண்டும். ஆனால், கன்றுக் குட்டிகளை இறைச்சிக்கு வெட்டக் கூடாது என்ற விதியை மீறி அவற்றை வெட்டினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்