ஆப்நகரம்

அறவழிப் போராட்டம்னு சொல்லிட்டு 'கேஸ்' வாங்கிய பாமகவினர்!

ரயில் மீது கல்வீசி அராஜகத்தில் ஈடுபட்ட பாமகவினர் 300 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 3 Dec 2020, 11:05 am
பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட நேற்று சென்னையில் அணி திரள முயன்ற பாமகவினரை பெருங்களத்தூர் அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதால் 1000 க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
Samayam Tamil பாமகவினர் மீது  வழக்குப் பதிவு
சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர் மீது வழக்குப் பதிவு


இதனால் ஜிஎஸ்டி சாலையில் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, பணிக்கு சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் ரயிலை மறித்து கல்வீசி தாக்கியும், ரயில் பாதையை இரும்புக் கம்பிகள், தடுப்புகள் போட்டும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தினர்.

பாமகவினரின் அடாவடியால் புறநகர் ரயில் சேவை ரத்து!

இதனையடுத்து பாமகவினர் சுமார் 300 பேர் மீது ரயில்வே போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் ஜிஎஸ்டி சாலையில் மறியல் செய்து பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி காரணத்துக்காக, தாம்பரம் காவல் நிலையத்தில் 66 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை டிராஃபிக்கை குறைக்க விரைவில் பயன்பாட்டுக்கு வரும் இன்னொரு சாலை!

இதேபோன்று, பழைய சோதனைசாவடி அருகே நடந்த மறியல் தொடர்பாக பாமகவினர் 64 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மேலும் இரணியம்மன் கோவில் சோதனைசாவடி அருகே மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் 1,500 பேர் மீதும், பம்மல் பிரதான சாலையில் நடந்த மறியல் தொடர்பாக பல்லாவரம் காவல் நிலையத்தில் 84 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி