ஆப்நகரம்

மசாஜ் சென்டர் நடத்த மாமூல் கேட்ட போலீஸ் உதவி கமிஷனர் கைது

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் துணை கமிஷனர் குமரகுருபரனிடம் செந்தில்குமரன் புகார் அளித்துள்ளார். பின், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனைப்படி, ஜெயராஜ் கேட்ட பணத்தை தருவாகக் கூறி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்று கொடுத்துள்ளார்.

Samayam Tamil 17 Apr 2019, 4:09 pm
மசாஜ் சென்டர் நடத்த ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக அசோக் நகர் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil Tamil_News_Apr_2019__875866115093232


சென்னை அசோக் நகர் 4வது அவென்யூவை சேர்ந்தவர் செந்தில்குமரன். இவர், அசோக்நகரில் ரையான் ரெக்ரியேசன் கிளப் நடத்தி வருகிறார். மசாஜ் சென்டருக்கு உரிய அனுமதி பெற்றுள்ள இவருக்கு அசோக் நகர் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ் மாதாமாதம் ரூ.50 ஆயிரம் மாமூல் கொடுக்க வேண்டும் என தொல்லை கொடுத்துள்ளார்.

அவர் மிரட்டலுக்குப் பணியாமல் இருக்க, கடந்த 3ஆம் தேதி அசோக் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினகுமார் உதவி கமிஷனுரை அனுசரித்து செல்லாவிட்டால் மசாஜ் சென்டரை காலி செய்ய நேரிடும் என மிரட்டயுள்ளார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் துணை கமிஷனர் குமரகுருபரனிடம் செந்தில்குமரன் புகார் அளித்துள்ளார். பின், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனைப்படி, ஜெயராஜ் கேட்ட பணத்தை தருவாகக் கூறி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்று கொடுத்துள்ளார்.

அப்போது உடன் மறந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜை கையும் களவுமாகப் பிடித்து, கைது செய்தனர்.

அடுத்த செய்தி