ஆப்நகரம்

மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை!

சென்னை கண்ணகிநகரில் மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு, ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இடையே விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 18 Dec 2018, 12:43 pm
சென்னை கண்ணகிநகரில் மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு, ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை!
மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை!


சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் வசித்து வருபவர் ஏ.பாபு (30). ஆட்டோ ஓட்டுநரான இவர் விமலா (27) என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிஷோர் (6) என்ற மகனும், தியா (4) என்ற மகளும் உள்ளனர்.

பாபுவிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விமலா கோவித்துகொண்டு திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து பாபு விமலாவை சமாதானபடுத்தி நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்,

இந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வீட்டின் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, பாபு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணகிநகர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, நான்கு பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுகாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இடையே விசாரித்து வருகின்றனர்.

குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி