ஆப்நகரம்

1.80 லட்சம் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படும் சென்னை; இனியாவது குற்றம் குறையுமா!

சென்னை: மாநகர் முழுவதும் லட்சக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Dec 2018, 12:57 am
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட தற்போதைய சூழலில், குற்றங்களைத் தடுக்க, கண்டறிய பல்வேறு வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன.
Samayam Tamil AK Viswanathan.


சென்னை மாநகரைப் பொறுத்தவரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிசிடிவி கேமரா குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதற்காக திரைப் பிரபலங்களைக் கொண்டு குறும்படங்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

இந்நிலையில் நேற்று சென்னை அடையாறு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10,242 ரகசிய சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதையடுத்து பேசிய அவர், சென்னை மாநகர் பாதுகாப்பு நிறைந்த நகராக விளங்குகிறது.

அடையாறு காவல் மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 10,000 கேமராக்கள் பொருத்த மக்கள் உறுதி அளித்துள்ளனர். சென்னை முழுவதும் இதுவரை 1,80,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொது இடங்களில் அரசு நிதியுதவி உடன், மேலும் ஒரு லட்சம் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று கூறினார். இனியாவது குற்றங்கள் குறைகிறதா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி