ஆப்நகரம்

கொரோனா: சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 1.2 லட்சம் வீடுகள்!!

கொரோனா பாதிப்பு காரணமாக, சென்னையில் மொத்தம் 1.2 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Jun 2020, 9:19 pm
சென்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, கொரோனா பாதிப்பு முன்பு இல்லாத அளவைவிட நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஜூன் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil corona isolated


இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, " சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மண்டலங்களில் உள்ள கொரோனா கட்டுப்படுத்தப் பகுதிகளில் மொத்தம் 1.2 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வீடுகளில் உள்ளோருக்கு உதவும் பணியில் 4 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளிலும் தலா 2 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரத்தை பொதுமக்கள் இணையதளத்தில் அறியலாம்.

கொரோனா: சிகிச்சை மையமாக மாறும் பிரபல பல்கலைக்கழகம்!!

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மொத்தம் 11 ஆயிரம் களப்பணியாளர் கொரோனா ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன" என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களில் 27 ஆயிரம் பேர் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மாநகரில் மொத்தம் 1.2 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி