ஆப்நகரம்

சென்னையில் வாட்டர் ஏடிஎம்; அதுவும் குறைஞ்ச விலையில் தூய குடிநீர்!

தூய குடிநீரை ஏடிஎம் பாணியில் வழங்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 12 May 2019, 6:48 pm
தமிழகத்தில் கோடைக்காலம் உச்சத்தில் இருக்கிறது. இதனால் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. மக்கள் காலி குடங்களுடன் அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பணம் படைத்தவர்கள் வாட்டர் கேன் வாங்கி, தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
Samayam Tamil Water ATM


சென்னையில் ஒரு வாட்டர் கேன் ரூ.35ல் இருந்து ரூ.40 வரை விற்கப்பட்டு வருகிறது. இது ஏழை, எளிய மக்களுக்கு ஏற்றதாக இல்லை. இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக வாட்டர் ஏடிஎம்களை சென்னையின் 800 இடங்களில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 20 லிட்டர் குடிநீர் வாட்டர் கேன் ரூ.7க்கு விற்கப்படுகிறது. இந்த சேவைக்காக 250 சதுர அடி நிலம், மெட்ரோ வாட்டர் மற்றும் மின்சார வசதியை அரசு வழங்குகிறது.

இந்த ஏடிஎம்களில் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில் தூய்மையான குடிநீர் அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மையங்களிலும் இரு பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டம் மூலம் ஒரு 20 லிட்டர் கேன் குடிநீர் விற்றால் மாநகராட்சிக்கு ரூ.1 கிடைக்கும்.

இதன்மூலம் ஒவ்வொரு வார்டிலும் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று சென்னை மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 400 இடங்களில் குடிநீர் வாட்டர் ஏடிஎம் திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி