ஆப்நகரம்

25 ஆயிரம் தெருக்கள்... 10 லட்சம் லிட்டர் கிருமிநாசினிகள்: மலைக்க வைக்கும் மாநகராட்சியின் பணி!!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை மொத்தம் 10.18 லட்சம் லிட்டர் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 29 Apr 2020, 2:11 am
தமிழகத்திலேயே அதிக அளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை சென்னை மாநகரில்தான் அதிகமாக உள்ளது.
Samayam Tamil spray


இன்றைய நிலவரப்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 600 -ஐ கடந்துள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நோக்கில்,பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மாநகரில் 25 ஆயிரம் சாலைகள் மற்றும் வீதிகளில் தினந்தோறும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன.

சென்னைவாசிக்கு கர்நாடகத்திலிருந்து பைக்கில் வந்த மருந்து: பெங்களூரு போலீசின் அசத்தல் சேவை!!

குறிப்பாக நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்கள் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிக்காக, 200 சிறிய ரக புகை பரப்பும் இயந்திரம், 30 வாகனங்களில் பொருந்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரம், 174 வாகனங்களில் பொருத்தப்பட்ட கிருமி நாசினி தெளிப்பான்கள் உட்பட மொத்தம் 1,160 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?

இதுநாள்வரை மொத்தம் 72, 044 லிட்டர் லைசால், 9.38 லட்சம் லிட்டர் சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் என மொத்தம் 10.18 லட்சம் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி