ஆப்நகரம்

விளம்பர பதாகைகள் வைப்பதற்கு விதிகளை கடுமையாக்கிய சென்னை மாநகராட்சி

முறையான அனுமதியின்றி வைக்கப்படும் பதாகைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 18 Sep 2018, 4:06 am
முறையான அனுமதியின்றி வைக்கப்படும் பதாகைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil chennai-hoardings
சென்னையில் விளம்பர பதாகைகள் வைக்க வழிமுறைகள்


விளம்பர பலகைகள், பதாகைகள் வைப்பதற்கான சட்டவிதிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது. அதன்படி, கட்டிடங்களில் வைக்கப்படும் பதாகைகளுக்கு உரிய அனுமதி இல்லை என்றால், கட்டிட உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பிரிவு 326ஏ கீழ் இதற்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , குற்றம் நிரூப்பிக்கப்படும் பட்சத்தில் விதிமீறியவர்களுக்கு ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை நகரில் உரிய அனுமதியின்றி வைக்கப்படும் பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகளை நீக்கும் பணியில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் நகரில் மொத்தம் 108 பதாகைகள் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

நகரில் வைக்கப்படும் பதாகைகளுக்கு அதற்கான உரிமம், உரிமம் காலவதி ஆகும் தேதி, பதாகையின் அளவு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என சென்னை மாநகராட்சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி