ஆப்நகரம்

எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளோம்- தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளோம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Apr 2018, 11:43 am
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளோம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil chennai high court indira banerjee
”மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளோம்”- தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி


எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இதற்கான தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தங்க. தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ விவாகரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்ததாக கூறி அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இன்று இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் கோரிய வழக்கில் மனசாட்சிபடி தீர்ப்பளித்துள்ளதாக கூறி, தங்கத்தமிழ்ச் செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரிய மனுவை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி