ஆப்நகரம்

சென்னையில் 23 ஜவுளிக்கடைகளில் திடீர் ஐடி ரெய்டு!

சென்னையில் 23 ஜவுளிக்கடைகளில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

Samayam Tamil 8 Jun 2018, 9:45 am
சென்னையில் 23 ஜவுளிக்கடைகளில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
Samayam Tamil it raid chennai


சென்னையில் பல்வேறு உள்ள ஜவுளிக்கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும், வியாபாராத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாக பயன்படுத்தியாதாகவும் குற்றச்சாட்டுக்கள் வந்தன.இதையடுத்து புகாரின் அடிப்படையில் இன்று காலை சுமார் 23 இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகளில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

சென்னையில் உள்ள காந்தி பேப்ரிக்ஸ், காந்தி பேஷன்ஸ், ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட 20 இடங்களில் வருமானவரித்தறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதே போல், வரி செலுத்தாமல் வியாபாரம் நடத்துவதாக வந்த புகாரின்படி, தியாகராய நகர், சவுகார் பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஐடி ரெய்டில், முக்கிய ஆவனங்கள் எதுவும் சிக்கியுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்ல

அடுத்த செய்தி