ஆப்நகரம்

பேருந்து, ரயில், மெட்ரோ, ஆட்டோவில் எத்தனை பேர் பயணிக்கலாம்? ரெடியாகும் தமிழக அரசு!

சென்னையில் ஊரடங்கிற்கு பிறகான பொதுப் போக்குவரத்து தொடர்பான வழிமுறைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 11 May 2020, 4:39 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. சமீபத்தில் கட்டுப்பாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுப் போக்குவரத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஊரடங்கு நாட்களில் வெளியே வரும் போது உரிய சரீர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பேருந்துகள், ரயில்களிலும் போதிய இடைவெளி விட்டு குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிகிறது.
Samayam Tamil சென்னையில் போக்குவரத்து


தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் தங்கள் ஊழியர்களுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தியுள்ளது. இதுபற்றி அனைத்து கழகங்களுக்கும் மாநில போக்குவரத்து செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

பதிவு செஞ்சும் பலனில்லையா? - சென்னை டூ உ.பி - இப்படியொரு முடிவெடுத்த தொழிலாளர்கள்!

அதில் தொடக்கத்தில் குறைந்தளவில் பேருந்துகளை இயக்குதல், மக்கள் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்குதல், பயணிகளை எவ்வாறு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. அதாவது சென்னை மாநகரப் பேருந்துகளில் ஒரு பேருந்திற்கு 25 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

20 பேர் போதிய இடைவெளி விட்டு அமர்ந்த நிலையிலும் 5 பேர் நின்று கொண்டு செல்வதற்கும் அனுமதிக்கப்படும். இருக்கைகள் 50 சதவீதம் மட்டும் நிரம்பியிருக்குமாறு நடத்துநர்கள் அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டும். புறநகர் ரயில்களில் ஒரு பெட்டிக்கு 50 பேர் மட்டும் பயணிக்கலாம்.

மெட்ரோ ரயில்களில் ஒரு ரயிலுக்கு 160 பேர் வரை பயணிக்கலாம். ஆட்டோவில் ஒரு பயணியும், வாடகை கார்களில் பின் இருக்கையில் இருவர் மட்டும் அமர அனுமதிக்கப்படுவர். ஆனால் பேருந்துகள் அல்லது ரயில்கள் தாமதமாக வரும் நேரத்தில் கூட்ட நெரிசலை எப்படி கட்டுப்படுத்துவது என்று அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

கொரோனா: சென்னையில் எங்கு, எவ்வளவு பாதிப்பு தெரியுமா?

இதுதொடர்பாக நடத்துநர் அருணகிரிநாதன் கூறுகையில், பேருந்து நிலையங்களில் கூட்டங்களை கையாள்வது மிகவும் சிரமமான விஷயம். நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தால் எங்களின் பேச்சை யாருமே கேட்க மாட்டார்கள். அடித்து பிடித்து கொண்டு ஏறி விடுவார்கள் என்றார்.

இதேநிலை தான் ரயில்களுக்கும் என்பதில் சந்தேகமில்லை. சென்னையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாளில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. அதில் 7 முதல் 10 பேர் வரை ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு எவ்வாறு விதிமுறைகளை வகுப்பது என்று தெரியவில்லை என்று மாநில அரசின் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி