ஆப்நகரம்

கருங்கடலாக மாறிய மெரினா.!காரணம் என்ன.?

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள கடல் நீர் இயல்புக்கு மாறாக கருப்பு நிறத்தில் காட்சியளிப்பது சமூக ஆர்வலர்களை அச்சமடையச் செய்துள்ளது.

TNN 5 Nov 2017, 10:56 am
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள கடல் நீர் இயல்புக்கு மாறாக கருப்பு நிறத்தில் காட்சியளிப்பது சமூக ஆர்வலர்களை அச்சமடையச் செய்துள்ள​து.
Samayam Tamil chennai marina beach water changes into black color
கருங்கடலாக மாறிய மெரினா.!காரணம் என்ன.?


சென்னையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாக்கடைக் கழிவுகள் மற்றும் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளும் மழை நீரில் அடித்துச் சென்று கால்வாய் வழியாக கடலில் கலந்தன.

இதே போன்று சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் கலந்த மழை நீரானது மெரினா கடற்கரையில் கலக்கிறது. இதனால் வங்கக்கடல் நீரானது நீல நிறத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. இதனால் மெரினா கடலுக்கு செல்லும் மக்கள் இந்த நீரைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர்.

ஆனால் இது கழிவு நீர் கலந்ததால் ஏற்பட்ட கறுமை நிறம் என்றும். அலைகள் கழிவுகளை கரையில் சேர்ப்பதாலேயே கறுப்பு நிறத்தில் காட்சியளிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடுக்கடலில் நீர் நீல நிறத்திலேயே இருப்பதாகவும் மாசடைந்த நீர் கலந்ததாலேயே இந்த கறுப்பு நிற தோற்றமளிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வாரத்தில் வங்கக்கடல் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Chennai marina beach water changes into black color

அடுத்த செய்தி