ஆப்நகரம்

வலுவிழந்த மாண்டஸ் புயல்: இன்னும் 260 கிலோ மீட்டர் தான்..! பரபரப்பு அப்டேட்

மாண்டஸ் புயல் வடமேற்கு திசை நோக்கி 12 கி.மீ. வேகத்தில் நகர்ங்றது வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Dec 2022, 12:13 pm
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னை மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் இன்று நள்ளிரவு சென்னை கடற்கரையை கடக்க உள்ளதால், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. முன்னதாக வங்கக் கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் தற்போது புயலாக வலுவிழந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil mahabalipuram cyclone mandous
mahabalipuram cyclone mandous


இருப்பினும், மாமல்லபுரம் பகுதி கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடைகரையோர மீனவ பகுதி மக்கள் தங்கள்து உடைமைகளை பாதுகாப்பான பகுதியில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் கரையை கடக்கவுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு தென் கிழக்கே 260கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

அது, மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. புயல் எதிரொலியால் மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், நெம்மேலிக்குப்பத்தில் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும், கடல் அரிப்பால் கோயில் முழுவதுமாக அடித்து செல்லும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமேப் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறு சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

புயல் எதிரொலியால் கடலூரில் தரைக்காற்று வேகம் அதிகரித்து கடலோர பகுதிகளில் 60கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. அதனால், கடலூர் துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் சென்னை உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகமாகியுள்ளதால் ஏரிகளை திறந்துவிட பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

அதுபோல, மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை டக்கும் போது, கடலை ஒட்டிய, கடற்கரையை ஒட்டிய சாலைகளில் பேருந்து சேவை இருக்காது என்றும் சென்னையில் இருந்து புதுவை, நாகை செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக திருப்பி விடப்படும் என்றும் அரசுப்போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி