ஆப்நகரம்

சென்னை சென்ட்ரல் அருகே புதிய சுரங்க நடைபாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல, புதியதாக சுரங்க பாதை வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jul 2018, 11:39 pm
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல, புதியதாக சுரங்க பாதை வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil cover-image
சென்னை சென்ட்ரல் புதிய சுரங்க நடைபாதை பயன்பாட்டிற்கு வந்தது


இந்த புதிய சுரங்க நடைபாதை மூலம், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பூவிருந்தவல்லி பிராதன சாலையை கடக்க ஆகிய தேவைகளுக்காக பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

தவிர, இந்த சுரங்க நடைபாதையின் மூலம் மூர் மார்கெட் காம்பிளக்ஸின் ஒரு பக்கம் மற்றும் பூங்கா புறநகர் ரயில் நிலையத்திற்கும் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிக நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்க நடைபாதையில், மின்படிக்கட்டு வசதிகள் இரண்டு வழிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது மூத்த குடிமக்கள், அவசர தேவைகளுக்காக செல்வோருக்கு பயன்படும்.

கடந்த மே 25ம் தேதி சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல ஒரே ஒரு சுரங்க நடைபாதை வழித்தடம் மட்டுமே இருந்தது. இதனால் மெட்ரோ பயணிகள் சுரங்க வழித்தடத்திலிருந்து வெளியே வந்து சாலையை கடந்து அவரவர் தேவைக்கு செல்லும் நிலை இருந்தது.

தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த சுரங்க வழித்தடம் மூலம் முன்னர் இருந்து வந்த சிரமங்கள் இல்லாமால், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பூவிந்தவல்லி சாலையை கடக்க புதிய சுரங்க நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

அடுத்த செய்தி