ஆப்நகரம்

சென்னையில் கைவிடப்படும் மெட்ரோ திட்டம் - அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்...

சென்னையில் நடைபெற்றுவரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 17 Apr 2023, 8:06 am
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது. சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் 2 வழித்தடங்களில் குறுகிய நேர இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil metro
metro


இந்நிலையில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (45.8 கி.மீ. ) கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ.) என மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

கைவிடப்படும் திட்டம்

இந்நிலையில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தை மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்துடம் இணைக்கும் வகையில் பயணிகள் வட்ட பாதை திட்டம் கைவிடப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, வழித்தடம் 5-ல் (மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை) உள்ள பயணிகள் மேடவாக்கம் செல்வதற்காக, 3-வது வழித்தடத்தில் (மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை) செல்லும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கான வட்ட பாதை திட்டம் கைவிடப்படுகிறது.

இதனால், சோழிங்கநல்லூர் நிலையத்தில் இறங்கி நடைமேடை மாறி திரும்பி செல்ல வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தாமதமாகிறதா? - அதிகாரிகள் அளித்த அதிர்ச்சி தகவல்...
திட்டம் கைவிடப்படுவது ஏன்?

முன்னதாக, வட்டபாதையில் ரயில் இயக்கத்தை தொடங்குவதற்காக, வழித்தடம் 3 மற்றும் 5 ஆகியவற்றை இணைக்கும் வகையில், தலா ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே தூண்களுடன் உயர்மட்ட பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், சாலைகளின் நடுவே தூண்களுடன் கட்டப்படும் உயர்மட்ட பாதையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் திட்டம் வருமா?

எதிர்காலத்தின் சாலை விரிவாக்கம் செய்யும்போது சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஒரு உயரமான கட்டடத்தின் நுழைவு வாயில் இருப்பதால் அதனை இடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே, தற்காலிகமாக வட்டபாதை திட்டத்தை கைவிடுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், பயணிகள் வரத்து அதிகரிப்பதை பொறுத்து எதிர்காலத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டபாதை திட்டம் கைவிடப்பட்டுள்ளதால் மேடவாக்கம் செல்பவர்கள் சற்று சிரமத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி