ஆப்நகரம்

சென்னையில் அதிவேக பயணம் செய்த 750 பேர் கைது

சென்னை மாநகரில் அதிவேக பயணத்தில் ஈடுபட்ட 750 ஓட்டுனர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

TNN 12 Jun 2017, 11:45 am
சென்னை: சென்னை மாநகரில் அதிவேக பயணத்தில் ஈடுபட்ட 750 ஓட்டுனர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil chennai police book 750 for rash driving
சென்னையில் அதிவேக பயணம் செய்த 750 பேர் கைது


கடந்த சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை அதிரடி சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், வேகமாக வாகனம் ஒட்டியவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை அபராதமாக வசூலித்துள்ளனர்.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, வார இறுதியில் இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணம், 3 பேரை வைத்துக் கொண்டு செலுத்தல், நிதானமில்லா பயணங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில், 60 பேர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஒட்டியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு, காமராஜர் சாலை, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், ராஜாஜி சாலை. பூந்தமல்லி நெடுஞ்சாலை, பசுமை வழி சாலை, திருவான்மியூர் உட்பட 40-க்கு மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் இளைஞர்கள் பைக் ரெஸ் செய்வதாகவும், அது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்ததாக முடிவதாகவும் வந்த புகாரையடுத்து காவல்துறையினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The Chennai police booked 750 drivers and two-wheeler riders, and collected a fine of 3 lakh over the weekend

அடுத்த செய்தி