ஆப்நகரம்

நினைவேந்தல் என்ற பெயரில் மெரினாவில் கூடினால் நடவடிக்கை: சென்னை காவல்துறை!

மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 May 2018, 9:17 pm
சென்னை: மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Marina Protest


இலங்கை அரசுப் படைகளால் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட சோக நிகழ்வை ஒட்டி, ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும்.

சென்னை மெரினாவில் கடந்த ஆண்டு தடையை மீறி நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நடப்பாண்டிலும் மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர், மெரினாவில் தடையை மீறி கூடி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நினைவேந்தல் கூட்டம் அஞ்சலி உள்ளிட்டவை நடத்த ஒன்று கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Chennai Police Commissioner warns about Marina protest.

அடுத்த செய்தி