ஆப்நகரம்

பால் குடித்த உடன் தூங்கிய குழந்தை செரிமாணக் கோளாறால் உயிரிழப்பு: உஷார் செய்தி..!!

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை பால் குடித்ததால் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு போலீஸார் புதிய விளக்கம் அளித்துள்ளனர்.

Samayam Tamil 28 Jun 2018, 7:42 pm
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை பால் குடித்ததால் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு போலீஸார் புதிய விளக்கம் அளித்துள்ளனர்.
Samayam Tamil 2-year-child-due-to-death-at-purasai
பால் குடித்து தூங்கிய குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு


சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வரும் சித்ரா, கடந்த 25ம் தேதி தனது 2 வயது பெண் குழந்தை கனிஷ்காவிற்கு பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை கனிஷ்காவிற்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பெற்றோர்கள் கிஷோர் மற்றும் சித்ரா குழந்தையை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கு மருத்துவமனை நிர்வாகிகள் குழந்தை நல மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். குழந்தை நல மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறுந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் மனமுடைந்த பெற்றோர்கள் சித்ரா மற்றும் கிஷோர் வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பாக்கெட் பாலை தவிர குழந்தை வேறு எதுவும் சாப்பிடாததால் மகள் கனிஷ்கா மரணத்தில் சந்தேக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், குழந்தை கனிஷ்காவின் உடல் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, பால் குடித்த உடன் குழந்தையை தூங்க வைத்ததால், செரிமாண கோளாறு ஏற்பட்டு மூச்சுக்குழாய்க்குக்ள் பால் சென்று மூச்சுத்திணறலாகி குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த காவல்துறையினர், குழந்தை கனிஷ்கா குடித்த பாலில் எந்த குறைபாடும் இல்லை என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி