ஆப்நகரம்

கோலாட்டத்துடன் கோவிட்-19 விழிப்புணர்வு... அசத்திய திருநங்கைகள்!

மக்களுக்கு கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநங்கைகள் சார்பில் கோலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Samayam Tamil 24 Jul 2020, 8:44 pm

கொரோனா வைரஸ் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் கோலாட்டம் நடன நிகழ்ச்சி நடத்தினர். திருநங்கைகள் மற்றும் தன்பாலினத்தவர் நலனுக்காக பணிபுரியும் ‘சகோதரன்’ அமைப்பு சார்பில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil கோலாட்ட நிகழ்ச்சி



இதற்காக சென்னை மாநகராட்சியுடன் சகோதரன் அமைப்பு கூட்டணி அமைத்துள்ளது. ஏற்கெனவே சகோதரன் அமைப்பு சார்பில் பல்வேறு கோவிட்-19 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ராஜ் பவன்: 76 சிஆர்பிஃப் வீரர்களுக்கு கொரோனா!

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேசுகையில், “சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு கோவிட்-19 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்திய அளவில் நடைபெற்ற திருநங்கைகள் அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை வைத்து கூவம் அருகே உள்ள சேரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

அதைத்தொடர்ந்து இரண்டாவதாக கோலாட்ட நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். கோலாட்டம் என்பது சிறந்த கலை மட்டுமல்லாமல் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கலையாகும். இந்நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

காசிமேடு மார்கெட் அதிகாலை 3 மணி, யார் வரலாம் என்றும் கட்டுப்பாடு!

கோலாட்டம் நடைபெறும்போது அருகாமையில் இருந்தவர்கள் கோவிட்-19 என்றால் என்ன, எப்படி பரவுகிறது, யாருக்கெல்லாம் ஆபத்து, எப்படி தடுப்பது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் ஆகியவை குறித்த பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

அடுத்த செய்தி