ஆப்நகரம்

5 பேரை பலிகொண்ட பரங்கிமலை ரயில் நிலைய தடுப்பு இடித்து அகற்றம்!

பரங்கி மலை ரயில் நிலைய தடுப்பை இடித்து அகற்றினர்.

Samayam Tamil 6 Aug 2018, 4:15 pm
சென்னை: பரங்கி மலை ரயில் நிலைய தடுப்பை இடித்து அகற்றினர்.
Samayam Tamil St Thomas Mount


கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் வந்தது. அப்போது படியில் தொங்கியபடி பயணித்த 10 பேர் தடுப்பில் மோதி கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்து 5 பேர் உயிரிழந்தனர்.

மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.8 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் தெற்கு ரயில்வே சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 5 பேரை பலிகொண்ட பரங்கிமலை ரயில் நிலைய பக்கவாட்டு தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பிறப்பித்துள்ளார். இதேபோல் பிற ரயில் நிலையங்களில் இருக்கும் ஆபத்தான தடுப்புச் சுவர்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Chennai St Thomas Mount suburban railway station barricades demolished.

அடுத்த செய்தி