ஆப்நகரம்

துரைப்பாக்கம் சுங்கச்சாவடியை அகற்ற கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை ராஜிவ்காந்தி சாலை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 9 Mar 2019, 6:34 pm
சென்னை ராஜிவ்காந்தி சாலை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil toll gate


இங்கு அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். பள்ளி செல்லும் மாணவர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியில் சிக்கி பெரும் இன்னலுக்கு உள்ளாவதாக கூறிய பொதுமக்கள், இந்த சுங்கச்சாவடியை தவிற்பதற்காகவே கனரக வாகனங்கள் பெரும்பாலும் துரைபாக்கம் விநாயக நகர் , சாய் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் வழியே சுற்றி செல்வதால் அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்.

மேலும், ராஜிவ்காந்தி சாலையில் மட்டுமே சுங்கச்சாவடிகள் சமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், சட்டத்திற்கு புறம்பாக துறைபாக்கம் ரேடியல் சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, அரசு உடனடியாக அப்பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சுங்கச்சாவடியை அகற்றாத பட்சத்தில் சட்ட ரீதியாக போராடப்போவதாக கூறினர்.

அடுத்த செய்தி