ஆப்நகரம்

சென்னை: போலி ஐடிக்களை உருவாக்கி, கோடி கணக்கில் பணமோசடி செய்தவர்கள் கைது!!

சென்னையைச் சேர்ந்த 3 பேர் திரைப்பட பாணியில், பிறரின் பெயரில் போலி அடையாள அட்டைகளைத் தயாரித்து, வங்கிகளில் கடன் வாங்கி பல கோடி மோசடி செய்துள்ளனர்.

Samayam Tamil 25 Jul 2018, 3:58 pm
சென்னையைச் சேர்ந்த 3 பேர் திரைப்பட பாணியில், பிறரின் பெயரில் போலி அடையாள அட்டைகளைத் தயாரித்து, வங்கிகளில் கடன் வாங்கி பல கோடி மோசடி செய்துள்ளனர்.
Samayam Tamil சென்னை: போலி அடையாள அட்டைகளை உருவாக்கி, பணமோசடி செய்தவர்கள் கைது!!
சென்னை: போலி அடையாள அட்டைகளை உருவாக்கி, பணமோசடி செய்தவர்கள் கைது!!


சென்னையைச் சேர்ந்த யுவராஜ் என்பவர், தன்னுடைய பெயரில் தனக்கு தெரியாமலே சிலர் வங்கியில் கடன்பெற்று இருப்பதாகவும், மேலும் மாதத்தவணையில் செல்போன் உள்ளிட்ட பெயர்களை தமது பெயரில் வாங்கியுள்ளதாகவும் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், ராஜேஷ், ஆண்டனி மற்றும் வினோத் உள்ளிட்ட மூவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜெராக்ஸ் சென்டருக்கு நகலெடுக்க வருபவர்களின் தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் திருடி, போலி அடையாள அட்டைகளை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, வங்கிகளில் டெபிட் கார்டு பெற்று, அதன்மூலம் பொருட்களை மாத தவணையில் வாங்கி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுபோல பல கோடி வரை இஅவர்கள் மோசடி செய்துள்ளதும்கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி