ஆப்நகரம்

எம்.ஐ.டியில் மாணவர்களுக்கு தீயாய் பரவும் கொரோனா... பெற்றோர் அதிர்ச்சி!

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 7 Jan 2022, 3:21 pm
தமிழ்நாட்டில் மூன்றாம் அலை கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் ஒரு நாள் பாதிப்பு ஏழாயிரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் நோய் பரவல் இருமடங்காக அதிகரித்துள்ளது.
Samayam Tamil TN College students corona


இந்நிலையில் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உள்ள விடுதியில் சுமார் 1600 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அவர்களில் ஏற்கனவே 65 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 120-ஐ கடந்துள்ளது. இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒமைக்ரான் வந்தால் என்ன செய்யணும்? -ஹெல்த் மினிஸ்டர் சொல்றதை கேளுங்க!

முதல்கட்டமாக 1,417 மாணவ, மாணவிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 65 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.. இதில் 9 பேர் மாணவிகள் என கூறப்படுகிறது.

இதனிடையே மீதமுள்ள மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்ச்சை அளிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை அடுத்து கல்வி நிறுவனத்துக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி