ஆப்நகரம்

இனிமே இவங்களும் எலெக்ட்ரிக் ட்ரெயினில் பயணிக்கலாம்!

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க இன்று முதல் (டிசம்பர் 23) பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 23 Dec 2020, 9:46 am
கொரோனா பொதுமுடக்க தளர்வுகளுக்கு பிறகு, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தற்போது மத்திய, மாநில அரசுத் துறை பணியாளர்கள், தனியார் நிறுவன அத்தியாவசிய துறைகளில் பணியாற்றுவோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil கோப்பு படம்
சென்னை புறநகர் ரயில்களில் நாளை (டிச.23) முதல் பொதுமக்களுக்கும் அனுமதி


இந்த நிலையில், புறநகர் ரயில்களில் பயணிக்க பொதுமக்களும் நாளை முதல் (அக்டோபர் 23) அனுமதிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கூட்ட நெரிசல் இல்லாத (பீக் ஹவர்ஸ் அல்லாத) நேரங்களான காலை 7 மணி முதல் 9:30 மணி வரையிலும், மாலை 4:30 மணியில் இருந்து இரவு 7 மணி வரையிலும் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புறநகர் மின்சார ரயில் சேவை... பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

அதன் பின், ஒன்பது மாதங்களுக்கு பிறகு நாளையில் இருந்துதான் மின்சார ரயில்களில் பயணிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கம் டூ சென்னை... காதலனை தேடி சென்னை வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

முன்னதாக , சென்னை கடற்கரை -தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 320 இல் இருந்து 406 ஆக நேற்று உயர்த்தப்பட்டது.

அடுத்த செய்தி