ஆப்நகரம்

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... மீண்டும் ஊரடங்கா?

சென்னையில் மீண்டும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற தகவல் என்பதால் இது மேலும் பெரிதாகவில்லை.

Samayam Tamil 26 Sep 2020, 10:55 pm
உலகம் மொத்தமும் கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்காக படாதபாடு பட்டு வருகிறது. உலகளவில் இந்தியாவும், இந்திய அளவில் தமிழ்நாடும், தமிழ்நாடு மாநில அளவில் சென்னையும் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளாக உள்ளன. மருந்துக்கான ஆராய்ச்சிகள் பல கட்டங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


தமிழகத்தைப் பொறுத்தவரை தலைநகர் சென்னையில்தான் தொடக்கம் முதலே பாதிப்புகள் அதிகமாகி வந்தன. நாளுக்கு நாள் மெல்ல மெல்ல உயர்ந்து நான்கிலக்கத்தை தொட்டதும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டது தமிழக அரசு. அதிரடியாக முழுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.

இந்நிலையில், மீண்டும் மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

தமிழகப் பள்ளிகள் திறப்பு: இந்த ரூல்ஸை மறந்துடாதீங்க - அப்புறம் பெரிய சிக்கல் தான்!

சில தினக்களுக்கு முன்பாக சென்னையில் மீண்டும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற தகவல் என்பதால் இது மேலும் பெரிதாகவில்லை. ஆனால், சென்னையில் மீண்டும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்றைய மாலை நிலவரப்படி, சென்னையில் புதிதாக ஆயிரத்து 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி