ஆப்நகரம்

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு 'பேட் நியூஸ்'

சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்திலும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Samayam Tamil 28 May 2020, 9:56 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
Samayam Tamil anna nagar


இன்றைய நிலவரப்படி, மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்குட்ட 15 மண்டலங்களில் ராயபுரம், திரு. வி.நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய ஐந்து மண்டலங்களில் மட்டும் 6,000 -க்கும் அதிகமானோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அதிகமாவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

அதாவது இந்த ஐந்து மண்டலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தலா ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த ஐந்து மண்டலங்களின் வரிசையில் தற்போது ஆறாவதாக அண்ணா நகர் மண்டலமும் சேர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, அண்ணா நகர் மண்டலத்தில் 1,046 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே, ராயபுரம் மண்டலத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா நிலவரம்: ஸ்டாலின் பகீர் அறிக்கை!!

சென்னை மாநகராட்சியின் ஆறு மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம்:
ராயபுரம் - 2252, கோடம்பாக்கம் - 1559, திரு.வி.க நகர் - 1325, தேனாம்பேட்டை - 1317, தண்டையார்பேட்டை - 1262, அண்ணாநகர் - 1046 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி