ஆப்நகரம்

தீபாவளிக்கு உங்க ஊருக்கு போக ஃபிளைட் டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான விமான பயணக் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Nov 2020, 11:03 am
சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் தற்போது இரு வழிகளில் (அப் அண்ட் டவுன்) 100 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil உள்நாட்டு விமான சேவை
சென்னை -உள்நாட்டு விமான சேவை


தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு பயணிப்போரின் வசதி்க்காக 20- 40 வரை கூடுதல் விமானங்களை இயக்க நிறவுனங்கள் திட்டமிட்டுள்ளன. அதேசமயம், தீபாவளி சிறப்பு விமானங்கள் என்ற பெயரில் பயணக் கட்டணமும் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கான பயணக் கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, 2,500 ரூபாயாக இருக்கும் திருச்சிக்கு செல்வதற்கான பயணக் கட்டணம் 7 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு எங்கப் போறதென்னு யோசிக்கிறீங்களா? - இதோ வண்டலூர் பார்க் திறந்தாச்சு!

தூத்துக்குடிக்கு பயணிப்பதற்கான கட்டணம் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் முதல் 7 ஆயுிரம் ரூபாய் வரை எகிறியுள்ளது. சேலத்துக்கான விமான பயணக் கட்டணமும் 2,300 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட வெளிமாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கான விமான பயணக் கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

காலையிலேயே இருட்டிக்கிட்டு இருக்கு வானம்...சென்னையில இன்னைக்கு டிராஃபிக் ஜாம்தான்!

அத்துடன் உயர் வகுப்புக்கான பயணக் கட்டணமும் 20 ஆயிரம் ரூபாயாக எகிறியுள்ளது. நவம்பர் 13 ஆம் தேதி வரை இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், 14 ஆம் தேதியிலிருந்து வழக்கமான பயணக் கட்டணமே பெறப்படும் என்றும் தெரிகிறது.

அடுத்த செய்தி