ஆப்நகரம்

உதவாக்கரை ஊழல் அரசின் பட்ஜெட்: துரைமுருகன் கலாய்

ஊழல் அரசு, உதவாக்கரை அரசு நிதிநிலையில் கலந்து கொள்ள வேண்டாம் என திமுக கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக தெரிவித்தார்

Samayam Tamil 23 Feb 2021, 2:05 pm
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. தொடங்கும்போது கேள்விகள் எழுப்ப நேரம் கேட்டது எதிர்க்கட்சியான திமுக. இதற்கு “நீங்கள் சொல்வதை சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால், பதில் கிடைக்காது” என்று பதிலளித்தார் சபாநாயகர் தனபால்.
Samayam Tamil durai murugan


இதனையடுத்து, அவையைவிட்டு வெளிநடப்பு செய்த பின் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி:

திமுக ஆட்சியில் கடன் குறைவாக தான் இருந்தது. ஆனால் தற்போது 5.7 லட்சம் கோடி அதிகமாக இருக்கிறது. சொல்லவதற்கே அசிங்கமாக இருக்கும் அளவிற்கு இந்த ஆட்சி நிர்வாகம் இருந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்று விட்டனர்.

நிதிக்குழுவின் அறிக்கை எங்கே? பிடி தியாகராஜன் கேள்வி

அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து செல்வோரின் கடைசி நிதிநிலை அறிக்கை தான் இது. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி என்ற ஒன்று இல்லை.

புதுவையில் நடந்துள்ள சம்பவம் ஒரு அரச படுகொலை, பாஜக எந்தவிதத்திலும் கொலை செய்ய தயங்காது என்பதற்கு இதுதான் சாட்சி ஊழல் அரசு, உதவாக்கரை அரசு நிதிநிலையில் கலந்து கொள்ள வேண்டாம் என திமுக கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக தெரிவித்தார்

அடுத்த செய்தி