ஆப்நகரம்

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மருத்துவ உபகரணகள் உதவியுடன் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 30 Jul 2018, 12:00 am

கருணாநிதி உடல்நிலை குறித்து வெளிவரும் வதந்திகளை நம்பவேண்டாம்- ஆ. ராசா கோரிக்கை

undefined

undefined

undefined

undefined

undefined

undefined

உணர்ச்சிவசத்தில் திமுக தொண்டர்கள்- திணறும் போலீஸார்..!!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மருத்துவ உபகரணகள் உதவியுடன் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil karunanidhi-dmk-chief
கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது- காவேரி மருத்துவமனை


வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு 8 மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை


அதன்படி இன்று சற்று நேரத்திற்கு முன்னர் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதன்படி முன்னதாக கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், தற்போது சீராக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மருத்துவமனை வளாகத்தில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள்.



மருத்துவ உபகரணங்களுடன் கருணாநிதி உடல்நிலையை தொடர்ந்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

இருப்பினும், சென்னை ஆழ்வேர்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு தொடர்ந்து திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


அதேபோல கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் இல்லம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உணர்ச்சி பெருக்கில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள்


இதற்கிடையில் காவேரி மருத்துவமனை வளாகத்தில் முன்பு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், கருணாநிதியின் உடல்நிலை குறித்து வெளிவரும் குழப்பமான தகவல்களால் கலக்கத்தில் உள்ளனர்.

இதனால் அருகிலிருக்கும் மரத்தில் ஏறி மருத்துவமனைக்குள் குதிக்க பல தொண்டர்கள் முயன்று பரபரப்பை கிளப்பி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த தற்போது மருத்துவமனை வளாகம் முழுவதும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ள நிலையில் மனைவி ராஜாத்தி அம்மாள், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், மு.க. அழகிரி, மு.க. தமிழரசு உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

மேலும், காவேரி மருத்துவமனை முன்பு கூடியிருந்த திமுக தொண்டர்கள் சிலர் தற்போது கோபாலபுரம் நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். மேலும் சென்னை நகரம் முழுவதும் போலீசார் நூற்றுக்கணக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி