ஆப்நகரம்

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக ஆதரவு: ஸ்டாலின் புது விளக்கம்

தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருவதால், பாராளுமன்றத்தில் பாஜக மீது நாளை கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Jul 2018, 1:28 pm
தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருவதால், பாராளுமன்றத்தில் பாஜக மீது நாளை கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 02stalin1
திமுக ஏன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரக்கிறது? ஸ்டாலின் விளக்கம்


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் எதுவும் நடக்காதது போல சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தமிழகம் முழுவதும் தனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் தெரிவித்த கருத்திற்கு பதில் கூறிய ஸ்டாலின், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களுக்கு ஆதாரம் உள்ளதை முதல்வர் பழனிசாமி மறைமுகமாக ஒத்துக்கொண்டுவிட்டதாக தெரிவித்தார்.

வருமான வரி சோதனை உள்நோக்கம் கொண்டதா என்பதற்கு மத்தியரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், தமிழகத்தில் பணம், தங்கத்துடன் சுற்றி வரும் கார்களை குறித்து மாநில அரசிடம் பதில் இல்லை என்றார்.

மத்தியில் ஆட்சி செலுத்தி வரும் பாஜக அரசு மாநில உரிமைகளை பறித்து வருகிறது எனவும், அதனால் பாராளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் விளக்கம் தெரிவித்தார்.

தமிழகத்தில் நீடித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக வரும் 23ம் தேதி ஆளுநரை சந்திக்கவுள்ளதாக கூறிய ஸ்டாலின், எட்டு வழிச்சாலை உட்பட பல்வேறு செயல்பாடுகளில் தமிழக அரசிற்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசுவதில் ஆச்சர்யமில்லை என்றார்.

அடுத்த செய்தி