ஆப்நகரம்

என்னடா நடக்குது இங்க.? குரோம்பேட்டை நடைபாலத்தையே பார் மாதிரி மாத்தி வச்சிருக்கீங்க.!

குரோம்பேட்டை நடை மேம்பாலத்தின் கீழ் பகுதியை பாராக மது பிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனை காவல் துறையினர் தடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 6 Jun 2023, 12:28 pm

ஹைலைட்ஸ்:

  • சென்னை குரோம்பேட்டை நடை மேம்பாலத்திற்கு கீழ் மது அருந்தும் குடிமகன்கள்
  • அதனை குட்டி பாராக மாற்றி அட்டகாசம்
  • அதனை கடந்து செல்லும் பெண்கள் முகம் சுளிப்பு
  • இதனை காவல் துறையினர் தடுத்து நிறுத்த கோரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil குரோம்பேட்டை நடை மேம்பாலம்
குரோம்பேட்டை நடை மேம்பாலம்
சென்னையில் சமீபத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த மதுபான கூட்டங்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைத்தது. முறையாக அனுமதிக்கப்பட்ட மதுபான கோலங்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டை ஜி. எஸ். டி சாலை பேருந்து நிலையம் அருகே நடை மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தின் அருகில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அந்த டாஸ்மாக் கடையின் மதுபான பார் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததால் அதுவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மூடி சீல் வைக்கப்பட்டது. அதனால் மதுவை வாங்கும் குடிமகன்கள் அந்த மதுவை அருந்த பொது இடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையை கடக்க கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலத்தின் கீழே வெற்றிடம் உள்ளது. அந்த இடத்தை குடிமகன்கள் அனைவரும் குட்டி பாராக மாற்றி அங்கு வைத்து மது குடித்து வருகின்றனர்

தண்ணீரில் கரைந்தோடும் சாலை - இத்தகைய சாலை வேண்டாம் என திருவண்ணாமலைவாசிகள் எதிர்ப்பு


அந்த வழியாக பொதுமக்கள் சென்று வரும் நிலையில் அதனை பெண்களும் குழந்தைகளும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவ்வாறாக குடிமகன்கள் அங்கு குடித்துவிட்டு அட்டகாசம் செய்வது அந்த வழியாக செல்லும் பெண்களை முகம் சுளிக்க வைக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அங்கு மது அருந்தும் குடிமகன்கள் அவர்களுக்குள் தகாத வார்த்தைகள் பேசிக் கொள்வதும் முறையற்ற முறையில் நடந்து கொள்வதும் என செய்வது அவளியாக செல்லும் பொது மக்களுக்கு அச்சத்தை தருகிறது. அதனால் இதனை காவல் துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி