ஆப்நகரம்

ரேபிட் டெஸ்ட்… சென்னை ஏர்போர்ட்டில் 18 பேருக்கு கொரோனா!

துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல வந்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 18 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Jan 2022, 5:23 pm
தமிழகத்தில் இருந்து துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்வதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகடீவ் சான்று இருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
Samayam Tamil chennai corona restrictions


இதனால், தோஹா, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஆயிரக்கணக்கானோருக்கு ரேபிட்( அதிவிரைவு) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தொற்று உறுதியா 18 பேரின் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், தொற்று உறுதியானவர்களில் சிலர் வீட்டில் தனிப்படுத்திக்கொள்வதாக தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொள்ளாத விமான நிலைய அதிகாரிகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 71 பேருக்கு கொரோனா: பெற்றோர் அதிர்ச்சி!

பாதிக்கப்பட்ட 18 பேருக்கும் ஒமைக்ரான் எஸ் வகை ஜீன் பாதிப்பு உள்ளதா இல்லை சாதாரண வகை கொரோனாவா என்பது குறித்து தெரியாத போதிலும் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி