ஆப்நகரம்

சென்னையில் சமாதானம் பேசச் சென்ற இடத்தில், மனைவியை வெட்டிக் கொன்ற எலக்ட்ரீசியன்!

சென்னை: மனைவியை வெட்டிக் கொன்ற தற்கொலைக்கு கணவன் முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TIMESOFINDIA.COM 14 Nov 2018, 7:12 pm
சென்னையில் கார்த்திக்(28), சௌமியா(24) வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு, சைதாப்பேட்டை துரைசாமி 2வது தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சௌமியா நேற்று சென்றுள்ளார்.
Samayam Tamil Murder


இந்நிலையில் இன்று காலை மனைவியை அழைத்து வர, சைதாப்பேட்டைக்கு கார்த்திக் சென்றுள்ளார். அங்கு சௌமியாவின் தாய், தந்தை ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது தன்னுடன் வருமாறு கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவி சௌமியாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்னர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் ஏற்பட்ட கூச்சலை அடுத்து, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். உடனே இருவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

அங்கு சௌமியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி