ஆப்நகரம்

சென்னையில் பலத்த மழை; 10 விமானங்கள் தாமதம்

சென்னையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக, சென்ன விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமானது.

TNN 1 Oct 2017, 4:19 pm
சென்னையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக, சென்ன விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமானது.
Samayam Tamil flight services affected as heavy rain lashes chennai
சென்னையில் பலத்த மழை; 10 விமானங்கள் தாமதம்


சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் கனமழை கொட்டி தீர்த்ததால், அங்குள்ள ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி இருந்தது.

தொடர்ந்து கன மழை பெய்ததால், இன்று அதிகாலை அபுதாபி மற்றும் லண்டனில் இருந்து வந்த 2 விமானங்கள் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

மேலும், மீனம்பாக்கத்திலிருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

அடுத்த செய்தி