ஆப்நகரம்

சென்னையை சூழ்ந்த பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிப்பு!!

சென்னையில் இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Samayam Tamil 26 Jan 2018, 1:13 pm
சென்னை: சென்னையில் இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Samayam Tamil fog disrupts flight operations at chennai airport
சென்னையை சூழ்ந்த பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிப்பு!!


சென்னை மாநகரத்தில் கடந்த சில தினங்களாக விடியற்காலையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நிலவிய கடும் பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை நோக்கி வந்த விமானங்கள் பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

மேலும், காலை 6 மணிமுதல் 8.30 மணிவரை உள்வரும் 11 விமானங்களும், புறப்பட வேண்டிய 19 விமானங்களும் தாமதாக இயக்கப்பட்டன. கொச்சி, மும்பையிலிருந்து சென்னை நோக்கி வந்த கோஏர் விமானங்களும், சிங்கப்பூரிலிருந்து வந்த இண்டிகோ விமானமும் பெங்களூரில் தரையிறங்கின. பெங்களூர் மற்றும் புனேவிலிருந்து வந்த இண்டிகோ விமானங்கள் பெங்களூருவிலும், கோலாலம்பூரிலிருந்து வந்த படிக் ஏர் விமானம் கொழும்புவிலும், கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானம் திருச்சியிலும் தரையிறங்கின.

பனிமூட்டம் விலகிய நிலையில் காலை 10 மணியளவில் மீண்டும் விமானப் போக்குவரத்து சீரடைந்து, விமானங்கள் சென்னைக்கு வந்தன.

அடுத்த செய்தி