ஆப்நகரம்

பிரபல ரவுடி சீசிங் ராஜா மீது ஏழாவது முறையாக குண்டாஸ்

சிட்லப்பாக்கம் ஆய்வாளர் தனசெல்வன் இதுவரை சீசிங் ராஜாவின் கூட்டாளிகளை கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Samayam Tamil 14 Jan 2021, 2:11 pm
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா இவர் மீது ஆந்திரா மாநிலம் உட்பட 30 க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆட் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் தற்போது ஏழாவது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil சேலம் குண்டாஸ்


சீசிங் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் சேர்ந்து கொண்டு கடந்த மாதம் குரோம்பேட்டை ஐஸ்வர்யா நகரை சேர்ந்த தொழிலதிபர் சரவணன்(42) என்பவரை வீடு புகுந்து அவரது இன்னோவா காரிலேயே துப்பாக்கி முன்னையில் கடத்திச் சென்றனர்.

கடத்திச் சென்று கண்ணை கட்டி வாலாஜா வரை அழைத்து சென்று அடித்து மிரட்டி 10 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர். பின்னர் அங்கேயே இறக்கி விட்டு விட்டு ரவுடி சீசிங் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் மற்றொரு காரில் அங்கிருந்து சென்றனர்.

உயிர் பிழைத்து தப்பி வந்த தொழிலதிபருக்கு மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வந்த சீசிங் ராஜா கும்பல் குறித்து தொழிலதிபர் சேலையூர் உதவி ஆணையர் சகாதேவனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து துபாக்கி, தோட்டா மற்றும் 40000 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

2 வயது சிறுமிக்கு கட்டுப்பட்டு களத்துக்கு வந்த ஜல்லிக்கட்டு காளை

இருப்பினும் சிட்லப்பாக்கம் ஆய்வாளர் தனசெல்வன் இதுவரை சீசிங் ராஜாவின் கூட்டாளிகளை கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் சீசிங் ராஜா ரவுடி கும்பலிடம் சில காவல் துறையை சார்ந்த போலீசார் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுடம் சுரேஷ் என்ற போலீசார் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாகவும், அருண் என்ற போலீசார் மாமூல் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கெல்லாம் மேல் பரங்கிமலை காவல் மாவட்டத்தை தனது கட்டுபாட்டில் இருக்கும் சில காவல் துறை அதிகாரிகள் முதல் ஆய்வாளர் வரை கடத்தப்பட்ட நபரிடமே பண வசூலிலும் ஈடுபடுவதாகவும் பரவலாக பேசப்படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது. இது குறிந்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கடத்தப்பட்ட தொழிலதிபர் சரவணன் தற்போது ரவுடிக்கு பயந்து போய் உயிர் பயத்தில் சுற்றி வருகிறார். போலீசார் ஒரு பக்கம் தொல்லை தருவதாகவும் தகவல் வருகிறது. போலீசாரும் சீசிங் ராஜாவின் கூட்டாளிகளை கைது செய்யாமல் அலட்சியம் காட்டி வருவது. அவர்களிடம் மாமூல் வாங்கியதை உண்மை தானோ என எண்ண தோன்றுகிறது.

ஆகவே காவல் ஆணையர் அவர்கள் சீசிங் ராஜா விவகாரத்தில் விசாரணை செய்து அவரது கூட்டாளிகளை கைது செய்து தொழிலதிபர் சரவணனுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமில்லாமல், ரவுடிகளிடம் மது அருந்திய போலீசார் மீதும் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி