ஆப்நகரம்

தமிழகத்தில் வேலைக்குப் போகும் பெண்களுக்காக மிக குறைந்த கட்டணத்தில் 14 தங்கும் விடுதிகள்

தமிழகத்தில் புதிதாக வேலைக்கு போகும் பெண்கள் தங்குவதற்கான பாதுகாப்பான 14 பெண்கள் விடுதியை கட்ட தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Samayam Tamil 31 Jul 2018, 3:02 pm
சென்னை : தமிழகத்தில் புதிதாக வேலைக்கு போகும் பெண்கள் தங்குவதற்கான பாதுகாப்பான 14 பெண்கள் விடுதியை கட்ட தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Samayam Tamil hostel


தமிழகத்தில் வேலைக்கு போகும் பெண்கள் தங்குவதற்கான தங்கும் விடுதிகள் மொத்தம் 28 உள்ளன. அவற்றில் பல பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை தேடி சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்லும் பெண்கள் தங்க அதிக தொகை கொடுத்து தங்கும் சூழல் நிலவுகிறது.

சென்னையில் தற்போது இயங்கி வரும் 3 தங்கும் விடுதியில் இரண்டு அடையாரிலும், ஒன்று வடபழனியிலும் உள்ளன. 120 பென்அல் அடையாறு தங்கும் விடுதிகளிலும், 50 பெண்கள் வடபழனியில் உள்ள விடுதியிலும் தங்கியுள்ளனர்.

14 புதிய விடுதிகள் :
இந்நிலையில் வேலைக்கு போகும் பெண்கள் தங்குவதற்கான புதிதாக 14 விடுதிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 6 விடுதிகள் சென்னையிலும், மற்றவை பிற மாவட்டங்களிலும் கட்டப்பட உள்ளன.


கட்டணம் எவ்வளவு :
சென்னை விடுதியில் தங்க மாதம் 25 ஆயிரம் ரூபாயும், மற்ற மாவட்டங்களில் இருக்கும் விடுதியில் தங்க 15 ஆயிரம் ரூபாயும் சம்பாதிக்கும் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

விடுதி கட்டணமாக சென்னையில் ரூ. 300, பிற மாவட்டங்களில் ரூ. 200 வசூலிக்கப்படும். இதை தவிர்த்து உணவு, மின்சார கட்டணம், விடுதி காப்பாளர் சம்பளம் மற்றும் இதர செலவுகள் அங்கு தங்கியுள்ள பெண்களிடம் பகிர்ந்து பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி